Saturday, 5 December 2009

இலங்கை தமிழர் பிரச்சனை

இலங்கை தமிழர் பிரச்சனை நேற்று பாராளுமன்றத்தில் திருமதி. சுஷ்மா ஸ்வராஜ் அவர்களால் கொண்டுவரப்பட்ட தனி நபர் தீர்மானத்தின் மீது வெளியுறவுத்துறை அமைச்சர் திரு. எஸ்.எம். கிருஷ்ணா அவர்கள் தாக்கல் செய்த அறிக்கை மற்றும் அதன் மீதான உறுப்பினர்களின் விவாதம் ஆகியவற்றை தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பாக கண்டேன்.
இந்த பிரச்னையில் திருமதி. சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள் காட்டிய ஆழமான அக்கறை மற்றும் அதனை தெரிவித்த பாங்கு மிகவும் அருமையாக இருந்தது. இந்த பிரச்னையில் இன்னலுக்கு ஆளான மக்களின் உண்மை நிலையை மக்களிடம் கொண்டு செல்ல எந்த ஒரு ஆதாரமும் அற்ற ஒரு அறிக்கையை அமைச்சர் சமர்ப்பித்து உறுப்பினர்களிடம் மாட்டிக்கொண்டு தவித்ததும் அதிலும் குறிப்பாக ஆளும் கூட்டணியின் உறுப்பினர்களான டி.கே. எஸ். இளங்கோவன் மற்றும் திருமாவளவன் ஆகியோரது கேள்விகளுக்கு கூட பதில் அளிக்க முடியாமல் திணறி பின்னர் வேறு வழி இன்றி மீண்டும் ஒரு நாடாளுமன்றக் குழுவை அனுப்ப ஆவண செய்வதாக தெரிவித்தார்.
இதில் முக்கியமாக அவர் தெரிவித்த ஒரு கருத்து இலங்கை அரசாங்கம் வெற்றி பெற்ற பிறகு நடந்து கொள்ளும் விதம் மற்றும் அங்கிருக்கும் தமிழர்களின் வாழ்வாதாரம் குறித்து வரும் செய்திகள் எதுவும் அவ்வளவு திருப்தியாக இல்லை என்று ஒப்புக்கொண்டதுதான்.
திருமதி. சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள் பாரதியாரின் வரிகளை மேற்கோள் காட்டி தமிழில் பல வார்த்தைகளை உச்சரித்தும் இறுதியாக முள்வேலிக்குள் அடைபட்டிருக்கும் தமிழ் மக்கள் விடுதலையாகும் நாள் எந்நாளோ என்று சொன்னது இந்த பிரச்சனையில் ஒவ்வொரு இந்தியரும் எதிர்பார்ப்பது என்ன என்று தெளிவாக காட்டியது.

No comments:

Post a Comment