நம்மை மீறிய ஒரு சக்தி தான் கடவுள்
நாம் நிம்மதி தேடி செல்லும் ஓர் இடம் ஆலயம்.
ஆனால் அங்கும் தலை விரித்தாடும் வேறுபாடுகளை நினைத்தால் நெஞ்சம் புழுங்குகிறது.
இருப்பவனுக்கு ஒரு நியதி இல்லாதவனுக்கு ஒரு நியதி.
செல்வாக்குள்ளவர்களுக்கு மரியாதை மற்றவர்களுக்கு .......
கலைஞர் அன்று பராசக்தி படத்தில் எழுதிய வசனம் கோவில் கூடாது என்பதற்காக அல்ல கோவில் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக்கூடாது என்பதற்க்க்காகத்தான் என்று எழுதிய அவரது ஆட்சியில் புற்றீசல் போல் பெருகும் கோவில் வியாபாரம் தடுக்கப்பட வேண்டும் என்பதுதான் என் போன்றோரின் எதிர்பார்ப்பு.
( குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் வெளி வந்த கோடிகளில் புரளும் கோவில் பிசினஸ் என்ற கட்டுரையை படித்ததால் எழுந்த சிந்தனை.)
No comments:
Post a Comment