Tuesday, 15 September 2009

கோயம்புதூரின் பெருமை

"கோயம்புத்தூர் மாவட்டம்


பெயர்க்காரணம்:


கோயம்புத்தூர் என்பது 'கோசர்' என்று சங்க இலக்கியம் கூறும் பொய்க் கூறாதவர் வாழ்ந்த இடம் என்று கூறப்படுகிறது. கோசர் என்பது கோயர் என்றாகி, கோயன் + புத்தூர் = கோயம்புத்தூராகி விட்டது.



கோவை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று நவீன இந்தியாவில் புகழ்பெற்றுள்ளது.

எல்லைகள்:


கோவை மாவட்டத்தின் வடக்கில் கர்நாடக மாநிலமும் தெற்கில் கேரள மாநிலமும் எல்லைகளாக உள்ளன. கிழக்கில் ஈரோடு மாவட்டமும், மேற்கில் நீலகிரி மாவட்டமும் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையும், நீலமலையும் ஒரு மதில்போல் இம்மாவட்டத்தை வளைத்துள்ளன.


வரலாற்றுச் சிறப்பு:



சங்க காலத்திலேயே தமிழகத்தை சோழநாடு, பாண்டியநாடு, சேரநாடு, கொங்குநாடு என்று பிரித்திருந்தார்கள். கோவை மாவட்டம் கொங்கு பகுதியில் இருந்தது. கொங்கு நாடுபற்றி சங்க இலக்கியங்களில் நிறைய தகவல்கள் கிடைக்கிறது. சேர நாட்டிற்கு அடுத்த நாடாக கொங்கு பகுதி இருந்தததால் சேரர்கள் இப்பகுதிகளை ஆண்டனர்.



களப்பிரர்கள், இராஷ்டிரர்கள், கங்க மன்னர்கள், சோழர்கள், விஜயநகரமன்னர்கள், திப்புசுல்தான், ஆங்கிலேயர் வரை இப்பகுதி அந்தந்தக் காலங்களில் அவர்களால் ஆளப்பட்டது.


கல்வெட்டில் காணப்படும் ஊர்கள்


சோழமாதேவி, தாளி, குடிமங்கலம், ஜோதம்பட்டி, கடத்தூர், கணியூர், கண்ணாடிப்புத்தூர், கொழுமம், குமாரலிங்கம், திருமுருக்கன்பூண்டி, அவிநாசி முதுமக்கள் இடுகுழிகள் கிடைத்த ஊர்கள் - இருகூர்,

சாவடிப்பாளையம், வெள்ளளுரில் 522 ரோம நாணயங்கள் கிடைத்துள்ளன.


ஆறுகள்:



பவானி, நொய்யல், அமராவதி, சின்னாறு, குரங்கனாறு, ஆழியாறு, சிறுவாணி ஆறு, பரம்பிக்குளம், நீராறு, சோலையாறு, போன்றவை பாய்ந்து இப்பகுதியை வளப்படுத்துகின்றன.


அணைகள்



நீலி அணைக்கட்டு, பாதுக்காடு அணைக்கட்டு, குனியமுத்துர்

அணைக்கட்டு, குறிச்சி, வெள்ளூர், சிங்காநல்லூர் போன்ற அணைக்கட்டுகளால் கோவை, பல்லடம் பகுதிகளில் 15,000ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றுள்ளது. அமராவதிக்கு குறுக்கே எட்டு அணைகள் கட்டப்பட்டு 9000 ஏக்கர் நிலம் உடுமலை

வட்டாரத்தில் பாசனம் பெறுகிறது.



அமராவதி நீர்த்தேக்கத்தின் மூலம் 40,000ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது."

No comments:

Post a Comment