Monday, 28 December 2009

குலம் பல காக்கும் குல தெய்வம்

ஒரு மரத்தில் எத்தனை கிளைகள் என்றும், அந்தக் கிளைகளில் எத்தனை இலைகள் என்றும் எப்படி எண்ண முடியாதோ அதுபோலத்தான் சமூகத்தில் எத்தனை சாதிகள், அந்த சாதிகளுக்குள் எத்தனை குலங்கள் என்பதையும் எண்ண முடியாது என்பர் ஆன்றோர். ஒரு குலத்துக்கு ஒரு குலதெய்வம் என்பதுதான் உலகில் பொதுவாக உள்ள நியதி.ஆனால் திருப்பூரை அடுத்த முத்தணம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள அங்காளம்மனை முதலியார், கவுண்டர், ஆசாரி, அய்யர், அய்யங்கார், தேவர், உடையார், வண்ணார், நாவிதர், போயர், படையாச்சி, சைவப்பிள்ளை என பல சாதியை சேர்ந்த பல்வேறு குலத்தவர்களும் குலதெய்வமாகப் போற்றி வணங்கி வருகிறார்கள்.



அரக்க சக்திகள் மடியவும், இந்திராதி தேவர்கள் உய்யவும் பார்வதிதேவி அங்காளம்மனாக அவதாரமெடுத்து மக்களுக்கு அருள்பாலிக்க வந்தாள். இப்படி வந்த அங்காளம்மன் திருக்கோயில்களுக்கெல்லாம் தலைமைப்பீடம் மேல்மலையனூர் என்பார்கள்.காசிக்கு வாசி அவினாசி என்று கொங்குமண்டலத்தில் எழுந்தருளியுள்ள அவினாசி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் வருவதுபோல் மேல்மலையனூருக்கு வாசி இந்த முத்தணம்பாளையம் அங்காள பரமேஸ்வரி என்று, மக்கள் திரளாக வந்து குவிகிறார்கள். மேல்மலையனூரில் சுயம்புவாக உருவாகி வளர்ந்து வரும் புற்று, பக்தர்களுக்குள்ள எப்படிப்பட்ட பிணியையும் நீக்கி அருள்வதுபோல் இங்குள்ள சுயம்புப் புற்றும் தீராத நோயையும் தீர்த்தருளி வருகிறது.இத்தலம், சுமார் எண்ணூறு வருடங்களுக்கு முன் எழுப்பப்பட்டிருக்கலாம் என்பது செவிவழிச் செய்தி. திருவண்ணாமலையில் அண்ணாமலை-யாரையும், மலையனூர் வாழ் அங்காளம்மனையும் வழிபட்ட கையோடு ஏராளமான பக்த கோடிகள் கொங்கு நாட்டிலிருக்கும் இத்தலத்திற்கும் வந்து வழிபட்டுச் செல்கின்றனர். முன்னொரு காலத்தில்,இப்பகுதி புதர்கள் மண்டிக்கிடக்கும் ஒரு காடாக இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்தக் காட்டிற்குப் பக்கத்தில் ஒரு கிராமம் இருந்தது. அங்கிருந்து ஆடு, மாடுகள் மேய்ச்சலுக்காக இந்தக் காட்டிற்கு வரும். அப்படி வரும் போது அதில் ஒரு பசு மட்டும் புற்றுருவாய், பாம்புருவாய் எழுந்திருக்கும் கருநாக ரூபிணிக்கு பால் சுரந்து கொடுத்து விட்டுப் போவதை வழக்கமாகக் கொண்டிருந்தது.

இந்நிலையில் ஒரு நாள் பசுவின் மடியில் பால் இல்லாததைப் பசுவின் சொந்தக்காரர் அறிந்து கொண்டார். உடனே கால்நடைகளை மேய்ப்பவனை அழைத்துக் கண்டித்து அனுப்பினார். மேய்ப்பவன் அப்பசுவினை கண்காணித்து வந்தான். அப்போது பசு மேய்ச்சலை முடித்து விட்டு வழக்கம் போல் புற்றில் தன் மடியிலிருந்த பாலை சுரந்து கொடுத்து விட்டு வந்ததை கண்டான். அவனால் அந்த அதிசயத்தை நம்ப முடியவில்லை. உடனே பசுவின் சொந்தக்காரரிடம் ஓடிப்போய் நடந்த விவரத்தைச் சொன்னான். அவன் சொன்னது உண்மை தானா என பசுவின் சொந்தக்காரர் யோசித்தார். `சரி...சரி... நீ போ...நாளை வந்து நான் பார்க்கிறேன்!' என்று அவனிடம் சொல்லி அனுப்பினார். திருவண்ணாமலைக்கும், மலையனூருக்கும் சென்று வரும் பக்தர்களில் புற்றுக்கு பால் சுரந்து கொடுத்த பசுவின் சொந்தக்காரரும் ஒருவர். அன்றிரவு அவரது கனவில் அம்மன் காட்சியளித்து, "புதர்கள் மண்டிக்-கிடக்கும் காட்டில் புற்றுருவாய் நான் எழுந்தருளியிருக்கிறேன். மலையனூர் சென்று பக்தர்கள் ரொம்பவும் சிரமப்பட்டு வருகின்றனர். இனி அதற்கு அவசியம் இல்லை. என்னை தரிசிப்பதென்றால் இங்கு வந்து என்னை தரிசித்து விட்டுச் செல்லலாம்'' என அருளியுள்ளார்.மறுநாள், பசுவின் மடியில் நாகம் பால் அருந்திய தெய்வீக காட்சியையும் கனவில் அம்மன் தோன்றிய நிகழ்வையும் கண்டவர், மலையனூர் சென்று வரும் பக்தர்கள் மேல் இரக்கம் கொண்டு அம்மனே இங்கு எழுந்தருளியிருப்பதை நினைத்து உள்ளம் பூரித்தார். அம்மன் புற்றுருவாய் எழுந்தருளியிருக்கும் புதர் மண்டிக் கிடக்கும் அந்த இடத்தை வாங்கி அங்காளம்மனுக்கு ஓர் ஆலயம் கட்டினார், அந்த பக்தர்.இங்கேயும் ஓர் மலையனூர் உருவாயிற்று. அதன்பின்னர் பிற்கால பாண்டியர்களான வீரபாண்டியன் (கி.பி 1265-1285), சுந்தரபாண்டியன் (கி.பி 1285-1300) காலங்களில் கோயில் விரிவுபடுத்திக்கட்டப்பட்டதாக வரலாற்றுச்செய்திகள் உள்ளன. இக்கோயிலுக்கு ஒரு வருடத்திற்கு முன்புதான் கும்பாபிஷேகம் முடிந்துள்ளது. என்றாலும் கருவறையை பழமையை மாற்றி புதுமையாக மாற்றியமைக்க அம்மன் உத்தரவு தரவில்லையாம். இப்போது பார்த்தாலும் கருவறையின் கற்சுவர்களில் பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய மீன்சின்னங்களையும், பாலகனை முதலை உண்ட தோற்றச்சிற்-பங்களையும் பார்க்க முடிகிறது.இக்கோயிலுக்குச் செல்லும் வழியான திருப்பூர் நல்லூரில் பரமசிவன் கோயில் ஒன்று உள்ளது. அம்மன் ஆலயம் எழுந்த போதே இக்கோயிலும் உருப்பெற்றது. இந்தப் பரமசிவன் வீற்றிருக்கும் இக்கோயிலையும் பக்தர்கள் தரிசித்து விட்டுச் செல்கின்றனர். ஆக இங்கேயும் ஓர் திருவண்ணாமலை விளங்கிக்கொண்டிருப்பது இன்னொரு அதிசயம்!பக்த கோடிகளுக்கு அருள்பாலிக்க திருவண்ணாமலையாரும், மலையனூர் வாழ் அங்காளம்மனும் இங்கே எழுந்தருளியிருக்கிறார்கள்.கொங்கு நாட்டில் உள்ள சக்தி பீடங்களில் முதன்மையானதாக விளங்குகிறது இத்தலம்! ஒன்பது சக்தி பீடங்களில் ஏழாவது பீடமாகவும் அவதாரத்தலமாகவும் சிறப்பு பெற்றது இத்திருத்தலம். இத்தலத்தினுடைய திருப்பெயர் சிறப்பிற்குரிய ஒன்றாகக் கருதப்படுகிறது. முத்தணம்பாளையம் என்றும் தரள(ம்) நகர் என்றும் இத்தலம் அழைக்கப்படுகின்றது. "முத்தணம்'' என்றால் மூன்று தனங்கள்'' என்று பொருள்படும். அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று செல்வங்களை உடையது தான் இந்த முத்தணம்பாளையம். தரளம் என்றால் முத்து என்று பொருள். அங்காளம்மன் மாரியம்மனாக அவதாரம் எடுத்த போது தான் முத்து என்ற திருப்பெயர் அவளுக்கு சூட்டப்பட்டது. இத்திருப்பெயரே காலப்போக்கில் முத்தணம்பாளையம் என்றாயிற்று. இத்தலத்திற்கு வந்தவர்கள் நோய், நொடிகள் நீங்கி பூரண குணமாகிச் சென்றிருக்-கிறார்கள். கஷ்டங்கள், குறைகள் நீங்கி, மனநிறைவு பெற்றும், அருட்பெருஞ்செல்வங்கள் அடைந்திருக்கிறார்கள். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். அந்த அளவிற்கு அற்புதங்கள் இத்தலத்தில் நடந்திருக்கின்றன.சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ள அம்மனை, திருமணத் தடை உள்ளவர்களும், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களும், குடும்பத்தில் பிரச்னை உள்ளவர்களும், செல்வ வளம் விரும்புவோரும், தீராத நோய் உள்ளவர்களும், சர்ப்பம் மற்றும் பிற தோஷம் உள்ளவர்களும் மனதார வழிபட்டு வந்தால் வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை. அம்மனை குல தெய்வமாக வழிபடுபவர்கள் தங்களது முதல் குழந்தைக்கு முத்தம்மாள், முத்துசாமி என்று பெயர் சூட்டி அழைக்கிறார்கள். அம்மனின் அருளால் குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் தலைக்கட்டு பொங்கல் வைத்து, முடி காணிக்கை செலுத்தி, காது குத்தி தங்களது நன்றிக் கடனை செலுத்துகிறார்கள். அங்காளம்மனுக்கு மற்றொரு திருப்பெயர் காலராத்திரி என்பார்கள். சிவராத்திரி அன்று அனைத்து அங்காளம்மன் கோயிலிலும் நடக்கும் மயானக்கொள்ளை பூஜை இங்கும் உண்டு. ஆனால் அது வித்தியாசமானது. கோயிலுக்கு அருகே உள்ள சுடுகாட்டுக்கு அருகில் ஒரு பிரமாண்ட அம்மன் மண்ணுருவம் படுத்த வாக்கில் செய்து அதற்கு கோர அலங்காரங்கள் செய்து பூஜை புனஸ்காரங்கள் செய்கிறார்கள். அந்த விழாவுக்கு ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட இதர மாநிலங்களி-லிருந்தும் பக்தர்கள் வருகிறார்களாம். இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் இந்தத் திருவிழா நடப்பதற்குப் பத்துப்பதினைந்து நாட்களுக்கு முன்பு ஊருக்குள் பெரியவர்கள் யாராவது வழக்கமாக இறந்து விடுவது வாடிக்கையாக இருந்துள்ளது.இறந்தவர்கள் தலையை வெட்டி எடுத்து மயானத்தில் செய்து வைக்கப்பட்ட உருவத்துடன் பிணைத்து பூஜைகள் செய்வார்களாம். அதெல்லாம் இப்போது வழக்கொழிந்து விட்டது. அம்மனின் தீர்த்தம், மஞ்சள் காப்பு, விபூதி, குங்குமம் ஆகியவை பிணி பீடைகளை விலக்கும் சக்தி வாய்ந்தது. அம்மனின் குங்குமம் மஞ்சள் காப்பினை சுமங்கலிப் பெண்டிர் தங்கள் திருமாங்கல்யத்தில் அணிந்து கொள்ளும் வழக்கம் உள்ளது
நன்றி :
குமுதம் பக்தி ஸ்பெஷல் 01.03.2009
சிறப்பு கட்டுரையாளர் செல்வி. வே. ரோகினி
இக்கட்டுரை பிரசுரமாகி வெளிவர பேருதவி புரிந்த திரு. கா.சு.வேலாயுதன் அவர்களுக்கு எனது நன்றிகள்.





4 comments:

  1. Boyers were kings and emperors of early India, வேடர்கள் எனும் போய நாயக்கர்களின் வம்சமாகும். இவ்வேட குடும்பம் இராமாயணம் எழுதிய கிராத் (Kirat ) வம்சாவளியான வால்மீகி குலத்தினை சார்ந்தவர்களாவர். நாயக் (Nayak) எனும் பெயர், மலைமீது வேட்டையாடும் போயர் எனும் வேடர்களின் பரம்பரை பட்டமாகும்,மேலும் ஓடும் நீரில் மீன்களை வேட்டையாடும் இனமான வால்மீகி மக்கள் என அழைக்கப்படும். போய பாளையக்காரர்கள் முத்துராஜா எனப்படும் ராஜூ நாயக்கரின் ஒரு பிரிவே ஆகும். முடிராஜ் இனத்தை முத்தராசி , தேனுகோல்லு, முத்துராசன், முத்திராஜுலு, நாயக், பாண்டு, தெலுகுடு, தெலுகா, தலாரி, கோழி என்று ஆந்திரப் பிரதேசதிலும், கங்கவார்,கங்கமதா,பேஸ்த, போய, கபீர், காபல்கார், கங்கைபுத்திரர், மற்றும் கோழி என்றும் கருநாடகத்தில் அழைப்பர். தமிழகத்தில் முத்திராயர் மற்றும் முத்திராயன் என்றும் மேலும் இம்மக்களை இந்தியாவின் வடமாநிலங்களில் கோழி (Koli) என்றும் அழைப்பர்.இன்றைய ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகளையும், முழுமையான கருநாடகப் பகுதிகளையும் தமிழ்நாட்டின் ஒருசில பகுதிகளையும் போய நாயக்கர்கள் பாளையங்களாக பிரித்து அரசாண்டது வரலாற்றுச்சுவடுகள் மூலம் புலனாகின்றது.
    போயர்கள், நாய்டு அல்லது நாயுடு, நாயக், டோரா (ராஜா) , டோரா பிட்டா (ராஜபுத்திரர்கள்) மற்றும் வால்மீகி என்று அழைக்கபடுவர். இதை Edgar Thurston அவர்கள் சென்னை மாகாணத்திற்கான மக்கள் துகை கணக்கெடுப்பின் பொழுது அரசுக்கு அறிக்கை அளித்த பொழுது பின்வருமாறு கூறியுள்ளார். The titles of the Boyas are said to be Naidu or Nayudu, Naik, Dora, Dorabidda (children of chieftains), and Valmiki.

    போய அல்லது போயர்கள் எனும் சொல் உயர்ந்த ராஜவம்சத்தை குறிக்கும் சொல்லாக கருதப்பட்டுவந்தது.
    மகாராஷ்டிராவில் போயர்கள்.

    ராஜபுத்திர இனமான அஹீர் (Ahir)எனும் இனத்தினை, கோலி (Gaoli), கோள (Guala),கோளகர் (Golkar),கோலன் Gaolan,ரவட் Rawat,கஹ்ர Gahra, மகாகுல் Mahakul.


    மவுரிய (Maurya) மன்னர்களின் வம்சம் சூரிய குலமாகும் வம்சாவளி ஆகும்.

    ஆட்சி செய்த அரசர்கள் : சந்திரகுப்தா மௌரிய, பிந்துசார, அசோக பேரரசர், தசரத சக்ரவர்த்தி மற்றும் ப்ரிஹ்றதா ஆகியோராவர். (Chandragupta Maurya, Bindusara, Ashoka the great, Dasaratha, Satadhanvan, Brihadratha)

    போயர்கள் (Bhoya/Boyar) மற்றும் கொற்கு (Korku) இனத்தவர்கள் தார் (Dhar) எனும் நகரினை பூர்விகமாக கொண்ட வம்சாவளியினர் ஆவர். மேலும் பெப்ச (Bopcha ) எனும் கொற்கு (Korku) இனம், போயர்கள் (Bhoya – Cultivator), பாரதி (Parthi – Hunter ), கோழி (Kohil – Local Cultivating Caste ), சனரியா (Sanaria – Tribe ), சௌதரி (Chaudhari – Head Man), பட்லிய (Patlia – Patel or Chief office of a village ), மற்றும் சோன்வானியா (Sonwania – one who purifies offenders among Gonds & other tribes) ஆகியோர் ஒரே ரத்த இனத்தினை (வம்சாவளியினர்) சார்ந்தவர்கள் இவர்கள் தங்களுக்குள் பெண் குடுத்து பெண் எடுதுக்கொள்ளுவர்.


    பன்வர் இனத்தவர்கள் மல்வா (Malwa) எனும் உஜ்ஜைன் (Ujjain ) அரசர்களாவர் மேலும் தார் (Dhar) எனும் இடத்தினை தலைநகராக கொண்டு பன்னிரண்டாம் நூற்றாண்டில் ஆட்சி செய்தவர்கள் ஆவர்.[28]

    சாளுக்கிய சம்ராஜியாமனது ஒரு போய சாம்ராஜ்யம் ஆகும், இவர்கள் ஒரிசா தேசத்தினை கி .பி. 16 – ஆம் நூற்றாண்டிலிருந்து 234 ஆண்டுகள் 12 போய அரசர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்தது அரசு ஆவணங்களின் மூலம் அறியமுடிகின்றது.

    சூரிய குலமான போய (Boya) வால்மீகி முனிவரின் கோழி வம்சாவளியினரை பலிஜா, பாலிஜி, குருச்துல மற்றும் நாயுடு (Balija / Balji / Gurusthula / Naidu) என அழைப்பர். இவர்கள் மதுரை (Madura), தஞ்சாவூர் (Tanjore) மற்றும் விஜயநகர் (Vijayanagar) ஆகிய நகரங்களை தலைநகராகக் கொண்டு அட்சிபுரிந்துவந்துள்ளனர். பலிஜா இனம் இரு பிரிவுகளை உடையது.

    போய நாயக்கர்களின் கோவில்கள்
    ஸ்ரீ பூரி ஜெகநாதர் ஆலயம்

    ஸ்ரீ பூரி ஜெகநாதர் ஆலயம் கி.பி. 16 – ஆம் நூற்றாண்டிலிருந்து இன்றுவரை பரம்பரை பரம்பரையாக சத்ரிய வம்சமான சாளுக்கிய மன்னர்கள் வழி தோன்றலாகிய போய அரச வம்சாவழி மக்களால் நிருவகிக்கப்பட்டு வருகின்றது.[55][56]

    ஸ்ரீ சென்னகேசவ கோவில்

    ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தில் கடவகல்லு புத்தூர் மண்டல் எனும் ஊரிலுள்ள சென்னகேசவ கோவில் போய பாளயக்காரர்களான (Palegar / Palayakarar = Local Kings ) மேசா திம்மன்ன நாயுடு அவர்களால் 16 – ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது, தற்பொழுது ஆந்திரபிரதேச அரசால் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

    அரசியலில் போய இன முக்கியஸ்தர்கள்

    மறை திரு டாக்டர் B.R .அம்பேத்கார் போய இனமான மஹார் (Mahar ) எனும் துணை பிரிவினை சார்ந்தவராவார்.
    Reference:

    1. www.nayaka.in

    2. http://ta.wikipedia.org/s/25ue

    3. http://boyanayaka.blogspot.in/2013/01/boyar-boya.html

    ReplyDelete
  2. Bhovis and Boyas are one and the same people who are related to Bhils of North India. There are also some sections of Vadderas who mention Valmiki as their subcaste. Vadderas worship goddess ankamma. Saint Valmiki was a bhil - boya tribesman. The Boya are not supposed to accept food from the Sugali and Vaddi communities.

    It is well known fact that the Mudiraj people worship Goddess Ankamma. There is one Ankali mutt near Chitradurga. Nestling amongst a group of rugged hills, west of Chitradurga, this mutt is known for its subterranean chambers. Near the Panchalinga cave (Wonder cave) entrance, is an inscription dated 1286 A.D. executed in the reign of the Hoysala King Narasimha III. This stronly proves that these Valmiki Nayakas and Mudiraj are one and the same. This region of Tirupati and Srikalahasti is known to be the home land of Kalabhras ( the ancestors of Muthurajas ) who inveded Chola, Chera, and Pandya kingdoms. These valmikis could be the descendants of kalabhras who are in turn are known as branch of Kalachuris of Central India.

    http://nayaka.in/Boyar_Mudiraja.php

    http://boyar.nayaka.in

    http://boyer.nayaka.in

    http://nayaka.in

    ReplyDelete
  3. இதில் இருக்கும் வரலாறு போல கோயம்புத்தூர் விளாங்குறிச்சியில் அமைந்துள்ள அங்காளம்மன் கோயில் வரலாறும் ஆனால் இந்த கோயில் தோன்றி 1500 வருடம் ஆகின்றது

    ReplyDelete