Monday, 16 August 2010

எது சுதந்திரம்

தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா

சுதந்திரப் பயிரை கண்ணீரால் காத்தோம்.

என்று பாடிய பாரதி இன்று இருந்திருந்தால் சுதந்திரம் படும் பாட்டை எண்ணி எண்ணி நித்தம் கண்ணீர் சிந்தி இருப்பார்.


சுதந்திரம் என்பதை தவறாக புரிந்து கொண்டு இந்த தலைமுறை ஆடும் ஆட்டம் நினைக்கவே அருவருப்பாக இருக்கிறது.

எழுத்து சுதந்திரம் என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்றும்

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் கருத்து கூறலாம் என்றும்

பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்றும்

வாழ்வியல் சுதந்திரம் என்ற பெயரில் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்றும்

நினைத்து தங்களை தாங்களே தரம் தாழ்த்திகொள்ளும் இந்த கலாசாரத்தை நினைத்தால் நெஞ்சம் பதறுகிறது.

இதை தடுத்து நமது பாரம்பரியத்தை, கலாசாரத்தை காத்திட உறுதி பூணுவோம்





































No comments:

Post a Comment