Friday, 18 December 2009

நெஞ்சு பொறுக்குதில்லையே

நண்பர்களே
வெள்ளைக்காரர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்று விட்டோம் ஆனால் இந்த அரசியல் கொள்ளைக்காரர்களிடம் இருந்து சுதந்திரம் பெரும் நாள் எந்நாளோ?
ஆந்திர அரசியல் களத்தில் தன்னுடைய செல்வாக்கை இழந்து தவித்த நேரத்தில் தான் K.C.R. என்ற புனிதருக்கு அடடா தனி தெலுங்கானா என்றொரு கோஷம் இருப்பதை மறந்து விட்டோமே இனியும் தாமதித்தால் நமது அரசியல் வாழ்வு அஸ்தமனம் ஆகிவிடும் என்று கருதி ( இவரும ஒரு காந்தி என எண்ணி அஹிம்சை வழி அறப்போராட்டமாம் உண்ணாவிரதம் ) மீண்டும் அதனை கையில் எடுத்து சுழற்றியதில் பாவம் அடுத்தவர் தூண்டி விட்டால் உடனே ஆர்த்தெழும் நமது அறிவிலிகள் போராட்டத்தில் குதித்து விட்டனர்.

தேர்தலுக்கு முன் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக தனி தெலுங்கானா அறிவிப்பை வெளியிடுவோம் என்று அறிவித்து அனைத்து கட்சிகளும் போட்டியிட்டன. ஆனால் தற்போது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளால் திணறிய ஆந்திர மாநிலத்தை வேறு வழியின்றி பிரிக்க ஒப்புக்கொண்ட மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் காங்கிரஸ் உட்பட அனைத்து கட்சிகளும் போராட்டத்தில் குதித்து விட்டன.

இது உண்மையிலேயே தனி தெலுங்கானாவுக்கு எதிரான போராட்டமா அல்லது ரோசையா என்ற தனி மனிதரை கழற்றி விடுவதற்காக நடத்தப்படும் போராட்டமா என்று கூட ஆய்ந்தறிய மனமின்றி போராடும் வர்க்கங்களை நினைத்தால்
"நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கேட்ட மனிதரை நினைத்து விட்டால்" என்னும் பாரதியின் வரிகள் தான் ஞாபகத்திற்கு வருகிறது.

1 comment:

  1. தெலங்கானா 50 ஆண்டுகால பிரச்சனை
    அதற்கு ஈழப்பிரச்சனை போன்ற நீ்ண்ட வரலாற்றுக் காரணங்களும் நியாயங்களும் உண்டு
    தமிழர்களான நமக்கு போராடிப்பழக்கமில்லை.
    உண்ணாவிரதம் ஊர்வலம் போன்றவை போராட்டங்கள் அல்ல என்பதை அறிந்திருக்கும் தெலங்கானாமக்கள் உக்கிரமாகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள்
    அவர்கள் சந்திரசேகர்ராவ் போன்ற கோமாளித்தலைவர்களைக் கூட போராடத்தூண்டும்அளவுக்கு அறிவு மிக்கவர்கள்
    நாம் உண்மையில் அவர்களை வாழ்த்தவேண்டும் என்பதோடு பின்பற்றவும் வேண்டும் என்பது என் கருத்து.

    ReplyDelete