சதுரங்க விளையாட்டில் இந்தியாவை தலை நிமிரச் செய்த தமிழன்.
எத்துனை சாதனைகள் செய்தாலும் தமிழர்கள் கொச்சைப்படுத்தப்படுவார்கள் என்பதற்கு இன்று மற்றுமொரு உதாரணமாகி விட்டார்.
சதுரங்க விளையாட்டில் பட்டங்கள் பெற்ற போதெல்லாம் எங்களில் ஒருவர் என்று மார்தட்டிக்கொண்டோம். ஆனால் இன்று அவருக்கு அளிக்கப்படவிருந்த பட்டம் அவர் இந்தியரா என்ற சந்தேகத்தின் பெயரால் தடுக்கப்பட்டு இருக்கிறது.
இதனால் யாருக்கு அவமானம்? ஆனந்துக்கா? இல்லை அதிகார வர்க்கத்துக்கா?
அந்த கவுரவத்தை நிராகரித்து பெருமை தேடிக்கொண்டார் ஆனந்த்.
தற்போது பேட்டியளிக்கும் கபில் சிபல் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டதோடு இன்றே அந்த பட்டத்தை அவருக்கு வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
நடந்த தவறுக்கு யார் பொறுப்பு என்பதை அறிந்து அவர் மேல் எடுக்கப்படும் நடவடிக்கை ஒன்றே நமக்கு ஆறுதலாக இருக்கும்.
No comments:
Post a Comment