Tuesday, 24 August 2010
விஸ்வநாதன் ஆனந்த்
எத்துனை சாதனைகள் செய்தாலும் தமிழர்கள் கொச்சைப்படுத்தப்படுவார்கள் என்பதற்கு இன்று மற்றுமொரு உதாரணமாகி விட்டார்.
சதுரங்க விளையாட்டில் பட்டங்கள் பெற்ற போதெல்லாம் எங்களில் ஒருவர் என்று மார்தட்டிக்கொண்டோம். ஆனால் இன்று அவருக்கு அளிக்கப்படவிருந்த பட்டம் அவர் இந்தியரா என்ற சந்தேகத்தின் பெயரால் தடுக்கப்பட்டு இருக்கிறது.
இதனால் யாருக்கு அவமானம்? ஆனந்துக்கா? இல்லை அதிகார வர்க்கத்துக்கா?
அந்த கவுரவத்தை நிராகரித்து பெருமை தேடிக்கொண்டார் ஆனந்த்.
தற்போது பேட்டியளிக்கும் கபில் சிபல் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டதோடு இன்றே அந்த பட்டத்தை அவருக்கு வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
நடந்த தவறுக்கு யார் பொறுப்பு என்பதை அறிந்து அவர் மேல் எடுக்கப்படும் நடவடிக்கை ஒன்றே நமக்கு ஆறுதலாக இருக்கும்.
Monday, 16 August 2010
எது சுதந்திரம்
சுதந்திரப் பயிரை கண்ணீரால் காத்தோம்.
என்று பாடிய பாரதி இன்று இருந்திருந்தால் சுதந்திரம் படும் பாட்டை எண்ணி எண்ணி நித்தம் கண்ணீர் சிந்தி இருப்பார்.
சுதந்திரம் என்பதை தவறாக புரிந்து கொண்டு இந்த தலைமுறை ஆடும் ஆட்டம் நினைக்கவே அருவருப்பாக இருக்கிறது.
எழுத்து சுதந்திரம் என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்றும்
கருத்து சுதந்திரம் என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் கருத்து கூறலாம் என்றும்
பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்றும்
வாழ்வியல் சுதந்திரம் என்ற பெயரில் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்றும்
நினைத்து தங்களை தாங்களே தரம் தாழ்த்திகொள்ளும் இந்த கலாசாரத்தை நினைத்தால் நெஞ்சம் பதறுகிறது.
இதை தடுத்து நமது பாரம்பரியத்தை, கலாசாரத்தை காத்திட உறுதி பூணுவோம்
Monday, 28 December 2009
குலம் பல காக்கும் குல தெய்வம்
ஒரு மரத்தில் எத்தனை கிளைகள் என்றும், அந்தக் கிளைகளில் எத்தனை இலைகள் என்றும் எப்படி எண்ண முடியாதோ அதுபோலத்தான் சமூகத்தில் எத்தனை சாதிகள், அந்த சாதிகளுக்குள் எத்தனை குலங்கள் என்பதையும் எண்ண முடியாது என்பர் ஆன்றோர். ஒரு குலத்துக்கு ஒரு குலதெய்வம் என்பதுதான் உலகில் பொதுவாக உள்ள நியதி.ஆனால் திருப்பூரை அடுத்த முத்தணம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள அங்காளம்மனை முதலியார், கவுண்டர், ஆசாரி, அய்யர், அய்யங்கார், தேவர், உடையார், வண்ணார், நாவிதர், போயர், படையாச்சி, சைவப்பிள்ளை என பல சாதியை சேர்ந்த பல்வேறு குலத்தவர்களும் குலதெய்வமாகப் போற்றி வணங்கி வருகிறார்கள். 
தைப் பசுவின் சொந்தக்காரர் அறிந்து கொண்டார். உடனே கால்நடைகளை மேய்ப்பவனை அழைத்துக் கண்டித்து அனுப்பினார். மேய்ப்பவன் அப்பசுவினை கண்காணித்து வந்தான். அப்போது பசு மேய்ச்சலை முடித்து விட்டு வழக்கம் போல் புற்றில் தன் மடியிலிருந்த பாலை சுரந்து கொடுத்து விட்டு வந்ததை கண்டான். அவனால் அந்த அதிசயத்தை நம்ப முடியவில்லை. உடனே பசுவின் சொந்தக்காரரிடம் ஓடிப்போய் நடந்த விவரத்தைச் சொன்னான். அவன் சொன்னது உண்மை தானா என பசுவின் சொந்தக்காரர் யோசித்தார். `சரி...சரி... நீ போ...நாளை வந்து நான் பார்க்கிறேன்!' என்று அவனிடம் சொல்லி அனுப்பினார். திருவண்ணாமலைக்கும், மலையனூருக்கும் சென்று வரும் பக்தர்களில் புற்றுக்கு பால் சுரந்து கொடுத்த பசுவின் சொந்தக்காரரும் ஒருவர். அன்றிரவு அவரது கனவில் அம்மன் காட்சியளித்து, "புதர்கள் மண்டிக்-கிடக்கும் காட்டில் புற்றுருவாய் நான் எழுந்தருளியிருக்கிறேன். மலையனூர் சென்று பக்தர்கள் ரொம்பவும் சிரமப்பட்டு வருகின்றனர். இனி அதற்கு அவசியம் இல்லை. என்னை தரிசிப்பதென்றால் இங்கு வந்து என்னை தரிசித்து விட்டுச் செல்லலாம்'' என அருளியுள்ளார்.மறுநாள், பசுவின் மடியில் நாகம் பால் அருந்திய தெய்வீக காட்சியையும் கனவில் அம்மன் தோன்றிய நிகழ்வையும் கண்டவர், மலையனூர் சென்று வரும் பக்தர்கள் மேல் இரக்கம் கொண்டு அம்மனே இங்கு எழுந்தருளியிருப்பதை நினைத்து உள்ளம் பூரித்தார். அம்மன் புற்றுருவாய் எழுந்தருளியிருக்கும் புதர் மண்டிக் கிடக்கும் அந்த இடத்தை வாங்கி அங்காளம்மனுக்கு ஓர் ஆலயம் கட்டினார், அந்த பக்தர்.இங்கேயும் ஓர் மலையனூர் உருவாயிற்று. அதன்பின்னர் பிற்கால பாண்டியர்களான வீரபாண்டியன் (கி.பி 1265-1285), சுந்தரபாண்டியன் (கி.பி 1285-1300) காலங்களில் கோயில் விரிவுபடுத்திக்கட்டப்பட்டதாக வரலாற்றுச்செய்திகள் உள்ளன. இக்கோயிலுக்கு ஒரு வருடத்திற்கு முன்புதான் கும்பாபிஷேகம் முடிந்துள்ளது. என்றாலும் கருவறையை பழமையை மாற்றி புதுமையாக மாற்றியமைக்க அம்மன் உத்தரவு தரவில்லையாம். இப்போது பார்த்தாலும் கருவறையின் கற்சுவர்களில் பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய மீன்சின்னங்களையும், பாலகனை முதலை உண்ட தோற்றச்சிற்-பங்களையும் பார்க்க முடிகிறது.இக்கோயிலுக்குச் செல்லும் வழியான திருப்பூர் நல்லூரில் பரமசிவன் கோயில் ஒன்று உள்ளது. அம்மன் ஆலயம் எழுந்த போதே இக்கோயிலும் உருப்பெற்றது. இந்தப் பரமசிவன் வீற்றிருக்கும் இக்கோயிலையும் பக்தர்கள் தரிசித்து விட்டுச் செல்கின்றனர். ஆக இங்கேயும் ஓர் திருவண்ணாமலை விளங்கிக்கொண்டிருப்பது இன்னொரு அதிசயம்!பக்த கோடிகளுக்கு அருள்பாலிக்க திருவண்ணாமலையாரும், மலையனூர் வாழ் அங்காளம்மனும் இங்கே எழுந்தருளியிருக்கிறார்கள்.கொங்கு நாட்டில் உள்ள சக்தி பீடங்களில் முதன்மையானதாக விளங்குகிறது இத்தலம்! ஒன்பது சக்தி பீடங்களில் ஏழாவது பீடமாகவும் அவதாரத்தலமாகவும் சிறப்பு பெற்றது இத்திருத்தலம். இத்தலத்தினுடைய திருப்பெயர் சிறப்பிற்குரிய ஒன்றாகக் கருதப்படுகிறது. முத்தணம்பாளையம் என்றும் தரள(ம்) நகர் என்றும் இத்தலம் அழைக்கப்படுகின்றது. "முத்தணம்'' என்றால் மூன்று தனங்கள்'' என்று பொருள்படும். அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று செல்வங்களை உடையது தான் இந்த முத்தணம்பாளையம். தரளம் என்றால் முத்து என்று பொருள். அங்காளம்மன் மாரியம்மனாக அவதாரம் எடுத்த போது தான் முத்து என்ற திருப்பெயர் அவளுக்கு சூட்டப்பட்டது. இத்திருப்பெயரே காலப்போக்கில் முத்தணம்பாளையம் என்றாயிற்று. இத்தலத்திற்கு வந்தவர்கள் நோய், நொடிகள் நீங்கி பூரண குணமாகிச் சென்றிருக்-கிறார்கள். கஷ்டங்கள், குறைகள் நீங்கி, மனநிறைவு பெற்றும், அருட்பெருஞ்செல்வங்கள் அடைந்திருக்கிறார்கள். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். அந்த அளவிற்கு அற்புதங்கள் இத்தலத்தில் நடந்திருக்கின்றன.சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ள அம்மனை, திருமணத் தடை உள்ளவர்களும், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களும், குடும்பத்தில் பிரச்னை உள்ளவர்களும், செல்வ வளம் விரும்புவோரும், தீராத நோய் உள்ளவர்களும், சர்ப்பம் மற்றும் பிற தோஷம் உள்ளவர்களும் மனதார வழிபட்டு வந்தால் வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை. அம்மனை குல தெய்வமாக வழிபடுபவர்கள் தங்களது முதல் குழந்தைக்கு முத்தம்மாள், முத்துசாமி என்று பெயர் சூட்டி அழைக்கிறார்கள். அம்மனின் அருளால் குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் தலைக்கட்டு பொங்கல் வைத்து, முடி காணிக்கை செலுத்தி, காது குத்தி தங்களது நன்றிக் கடனை செலுத்துகிறார்கள். அங்காளம்மனுக்கு மற்றொரு திருப்பெயர் காலராத்திரி என்பார்கள். சிவராத்திரி அன்று அனைத்து அங்காளம்மன் கோயிலிலும் நடக்கும் மயானக்கொள்ளை பூஜை இங்கும் உண்டு. ஆனால் அது வித்தியாசமானது. கோயிலுக்கு அருகே உள்ள சுடுகாட்டுக்கு அருகில் ஒரு பிரமாண்ட அம்மன் மண்ணுருவம் படுத்த வாக்கில் செய்து அதற்கு கோர அலங்காரங்கள் செய்து பூஜை புனஸ்காரங்கள் செய்கிறார்கள். அந்த விழாவுக்கு ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட இதர மாநிலங்களி-லிருந்தும் பக்தர்கள் வருகிறார்களாம். இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் இந்தத் திருவிழா நடப்பதற்குப் பத்துப்பதினைந்து நாட்களுக்கு முன்பு ஊருக்குள் பெரியவர்கள் யாராவது வழக்கமாக இறந்து விடுவது வாடிக்கையாக இருந்துள்ளது.இறந்தவர்கள் தலையை வெட்டி எடுத்து மயானத்தில் செய்து வைக்கப்பட்ட உருவத்துடன் பிணைத்து பூஜைகள் செய்வார்களாம். அதெல்லாம் இப்போது வழக்கொழிந்து விட்டது. அம்மனின் தீர்த்தம், மஞ்சள் காப்பு, விபூதி, குங்குமம் ஆகியவை பிணி பீடைகளை விலக்கும் சக்தி வாய்ந்தது. அம்மனின் குங்குமம் மஞ்சள் காப்பினை சுமங்கலிப் பெண்டிர் தங்கள் திருமாங்கல்யத்தில் அணிந்து கொள்ளும் வழக்கம் உள்ளதுFriday, 18 December 2009
நெஞ்சு பொறுக்குதில்லையே
வெள்ளைக்காரர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்று விட்டோம் ஆனால் இந்த அரசியல் கொள்ளைக்காரர்களிடம் இருந்து சுதந்திரம் பெரும் நாள் எந்நாளோ?
ஆந்திர அரசியல் களத்தில் தன்னுடைய செல்வாக்கை இழந்து தவித்த நேரத்தில் தான் K.C.R. என்ற புனிதருக்கு அடடா தனி தெலுங்கானா என்றொரு கோஷம் இருப்பதை மறந்து விட்டோமே இனியும் தாமதித்தால் நமது அரசியல் வாழ்வு அஸ்தமனம் ஆகிவிடும் என்று கருதி ( இவரும ஒரு காந்தி என எண்ணி அஹிம்சை வழி அறப்போராட்டமாம் உண்ணாவிரதம் ) மீண்டும் அதனை கையில் எடுத்து சுழற்றியதில் பாவம் அடுத்தவர் தூண்டி விட்டால் உடனே ஆர்த்தெழும் நமது அறிவிலிகள் போராட்டத்தில் குதித்து விட்டனர்.
தேர்தலுக்கு முன் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக தனி தெலுங்கானா அறிவிப்பை வெளியிடுவோம் என்று அறிவித்து அனைத்து கட்சிகளும் போட்டியிட்டன. ஆனால் தற்போது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளால் திணறிய ஆந்திர மாநிலத்தை வேறு வழியின்றி பிரிக்க ஒப்புக்கொண்ட மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் காங்கிரஸ் உட்பட அனைத்து கட்சிகளும் போராட்டத்தில் குதித்து விட்டன.
இது உண்மையிலேயே தனி தெலுங்கானாவுக்கு எதிரான போராட்டமா அல்லது ரோசையா என்ற தனி மனிதரை கழற்றி விடுவதற்காக நடத்தப்படும் போராட்டமா என்று கூட ஆய்ந்தறிய மனமின்றி போராடும் வர்க்கங்களை நினைத்தால்
"நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கேட்ட மனிதரை நினைத்து விட்டால்" என்னும் பாரதியின் வரிகள் தான் ஞாபகத்திற்கு வருகிறது.
Monday, 14 December 2009
எம். பி.க்களின் பிரதியுபகாரம்
They have now become mere statistics. And that is why five Delhi Police personnel, a woman constable of the Central Reserve Police Force, two Parliament security attendants, a gardener and a journalist — who all fell to the terrorists’ bullets on this fateful day eight years ago, are remembered only by a handful of MPs as others preferred to take off on Sunday.Apart from Vice President Hamid Ansari, Prime Minister Manmohan Singh, UPA Chairperson Sonia Gandhi, Lok Sabha Speaker Meira Kumar and Leader of the Opposition L K Advani, only 11 MPs attended the ceremony inside the Parliament complex to pay floral tributes to the martyrs of the terrorist attack.However, many of them might have argued that on Friday both the Lok Sabha and the Rajya Sabha paid tributes to the security personnel, who were killed in the attack and also observed one minute’s silence as a mark of respect.Five heavily-armed gunmen had stormed the Parliament on December 13, 2001, and opened indiscriminate fire, killing nine people. A journalist, who was injured in the gunfire, subsequently succumbed to the injury. All the five terrorists were shot dead.The attack took place around 11:40 am (IST), minutes after both Houses of Parliament had adjourned for the day.The suspected terrorists dressed in commando fatigues entered Parliament in a car through the VIP gate of the building. Displaying Parliament and Home Ministry security stickers, the vehicle entered the Parliament premises. The terrorists set off massive blasts and had used AK-47 rifles, explosives and grenades for the attack.Senior ministers and over 200 Members of Parliament were inside the Central Hall of Parliament when the attack took place. Security personnel had sealed the entire premises which saved many lives.A year later, four terrorists were arrested for the attack and found guilty after trial. Mohammad Afzal Guru was the only accused to be awarded the death penalty.
Saturday, 5 December 2009
இலங்கை தமிழர் பிரச்சனை
இந்த பிரச்னையில் திருமதி. சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள் காட்டிய ஆழமான அக்கறை மற்றும் அதனை தெரிவித்த பாங்கு மிகவும் அருமையாக இருந்தது. இந்த பிரச்னையில் இன்னலுக்கு ஆளான மக்களின் உண்மை நிலையை மக்களிடம் கொண்டு செல்ல எந்த ஒரு ஆதாரமும் அற்ற ஒரு அறிக்கையை அமைச்சர் சமர்ப்பித்து உறுப்பினர்களிடம் மாட்டிக்கொண்டு தவித்ததும் அதிலும் குறிப்பாக ஆளும் கூட்டணியின் உறுப்பினர்களான டி.கே. எஸ். இளங்கோவன் மற்றும் திருமாவளவன் ஆகியோரது கேள்விகளுக்கு கூட பதில் அளிக்க முடியாமல் திணறி பின்னர் வேறு வழி இன்றி மீண்டும் ஒரு நாடாளுமன்றக் குழுவை அனுப்ப ஆவண செய்வதாக தெரிவித்தார்.
இதில் முக்கியமாக அவர் தெரிவித்த ஒரு கருத்து இலங்கை அரசாங்கம் வெற்றி பெற்ற பிறகு நடந்து கொள்ளும் விதம் மற்றும் அங்கிருக்கும் தமிழர்களின் வாழ்வாதாரம் குறித்து வரும் செய்திகள் எதுவும் அவ்வளவு திருப்தியாக இல்லை என்று ஒப்புக்கொண்டதுதான்.
திருமதி. சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள் பாரதியாரின் வரிகளை மேற்கோள் காட்டி தமிழில் பல வார்த்தைகளை உச்சரித்தும் இறுதியாக முள்வேலிக்குள் அடைபட்டிருக்கும் தமிழ் மக்கள் விடுதலையாகும் நாள் எந்நாளோ என்று சொன்னது இந்த பிரச்சனையில் ஒவ்வொரு இந்தியரும் எதிர்பார்ப்பது என்ன என்று தெளிவாக காட்டியது.
Thursday, 12 November 2009
குழந்தைகளின் எதிர்பார்ப்பு பற்றிய ஒரு கவிதையும் அதற்கு அப்துல் கலாம் அவர்கள் வெளியிட்டுள்ள கடல் கடந்த சம்பந்தமும்
‘I only want to enjoy my childhood, ma’
(Dear co-parents, some of us might hear a small, fading voice making yet another attempt to reach us)
Amma, I don’t want to go to school.
I am just a child, Ma. I want someone to tell me stories and teach me. I want to watch tadpoles and butterflies and know what they eat, where they sleep. I want to climb a hill and catch a cloud to see what it is made of.
I want to wait with my hands in the stream and feel the fish swimming.
I want to run with the puppies, sing with the birds, and play with paper-boats in the rain.
I want to lie down on the soft green grass and hear the wind whisper.
Only then I want to learn more about them from the printed word.
Only after my imagination is fired, my thirst to know more has begun, a seed of ‘Why?’ is planted in my brain.
Amma, I feel trapped in the prison-like classroom. I feel my spirit slowly weakening with the monotonous teaching. Often, when I ask a basic question our teachers say, “No time for all that. Let us finish the syllabus.”
I get tired of studying just for marks without pausing to truly understand.
I want to go to the museum with my classmates and hear my teacher explain the stories of the artefacts.
I want plenty of nature trips where real Biology classes would be held.
I want to see colourful videos of volcanic eruptions and deep-sea dwellings.
I want our whole school to visit together the historic and cultural places in my city.
I want to learn astronomy after looking through a telescope once.
I don’t want to just read them in my textbooks; I want to see, hear, touch, smell and taste whatever I can. I want to experience.
Why can’t the school make at least one such trip every year?
And, I cannot stoop down anymore to carry my school sack. My back is ready to break. Why should I carry all the books everyday? Why can’t we have only two subjects per day? Or, why don’t we have lockers like in the Western schools? And, why should I squeeze in that over-crowded auto?
But, Amma, growing up no longer seems to be fun. I see only more of homework, winter projects, summer classes, weekly tests, monthly tests, quarterly, half-yearly and annual exams, external competitive exams, more tests, more competitions, more pressure, more stress…
When can I sing, paint, dance, swim, or cycle?
When I can just play cricket or even hide-and-seek?
What happened to that minimum sleep that you always say a child needs?
Why should I always study, study?
Amma, I am scared of increasing atrocities by untrustworthy teachers, ragging-raving seniors, acid-loving nuts, perverted adults…
Ma, right now, I don’t want to be a doctor, engineer or anything else.
I just want to feel safe and secure, play and learn without any stress before I become an adult like you.
I only want to enjoy my childhood, Ma.
Thanks to THE HINDU
November 8, 2009
ABDUL KALAM’S RESPONSE
Need for creativity in classroom
The former President, A.P.J. Abdul Kalam, writes:
I was happy to see the article “I only want to enjoy my childhood, ma” by Inumella Sesikala (Open Page, Nov. 8). I liked the article very much, which is a dream of every child. Creativity of children has to come out from the classroom. Some of us had such opportunities. Our children should go to primary school only at the age of six. Till then, we have to promote creativity of the children with great teachers and an innovative classroom environment.
Yesterday, when I was reading the book Spiritual Intelligence, The Ultimate Intelligence by Danah Zohar and Ian Marshall, I came across the poem, “ The Student’s prayer.”
“The young son of a Chilean biologist, Umberto Maturana, became unhappy at school because he felt his teachers were making it impossible for him to learn. They wanted to teach him what they knew, rather than drawing out what he needed to learn. As a result Maturana wrote “ The Student’s Prayer”, of which this translation is an abridged version. It perfectly expresses the spiritually intelligent individual’s response to the conforming pressures of parents, teachers, bosses or the crowd.
The Student’s Prayer
Don’t impose on me what you know, I want to explore the unknown
And be the source of my own discoveries. Let the known be my liberation, not my slavery.
The world of your truth can be my limitation; Your wisdom my negation.
Don’t instruct me; let’s walk together. Let my richness begin where yours ends.
Show me so that I can stand On your shoulders.
Reveal yourself so that I can be Something different.
You believe that every human being Can love and create.
I understand, then, your fear When I ask you to live according to your wisdom.
You will not know who I am By listening to yourself.
Don’t instruct me; let me be. Your failure is that I be identical to you.”
I thought, there is a connectivity among young hearts even beyond ocean — “I only want to enjoy my childhood, ma” and “The Student’s Prayer.”
Thanks to THE HINDU November 11, 2009